பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது புத்தள மக்களிடம் எதிரியாக கட்ட  வேண்டும்

வடமாகாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களை ஆதரித்து அரவணைத்த மக்கள் புத்தளம் வாழ்  உறவுகள் அதை ஒருபோதும் வடமாகாணத்தில் இருந்து வெளியேறிய மக்கள் மறக்கமாட்டார்கள்.

புத்தளம் மாவட்ட மக்களின் அபிவிருத்தி அரச நியமனங்களில் தடைகளை ஏற்படுத்தியதும் இல்லை புத்தளம் மாவட்ட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என நினைக்கும் வடமாகாண மக்கள் பட்டதாரி நியமன விடயத்திலும் எப்படி தலையிட்டு இருக்க முடியும்.

வடமாகாணத்தில் இருந்து வெளியேறி புத்தளத்துக்கு வந்த அதிகமான மக்கள் சொந்த மண்ணுக்கு மிள் குடியேறி சென்றுவிட்டார்கள் எஞ்சி  இருக்கும் வடமாகாண மக்களில் அதிகமானவர்கள் புத்தளம்  மாவட்டதை தமது வாழ்விட மாவட்டமாக பதிவு செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாக்குப்பதிவும் புத்தளமாவட்டத்தில் உள்ளது….

தேர்தல் காலத்தில் புத்தளம் மாவட்ட பதிவில் உள்ள  இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கிராமத்தை  நோக்கி படையெடுக்கும் புத்தளத்து அரசியல் வாதிகள் அங்கு சென்று ஒற்றுமை இணைந்து வாழ்வது பற்றி பேசி அந்த மக்களின் வாக்குரிமையை வாங்குகிறார் அதே நேரம் அரச நியமனம் என்றதும் அந்த மக்களை இடம்பெயர்ந்த மக்கள் அவர்களுக்கு எப்படி புத்தளத்தில் நியமனம் கிடைக்க வேண்டும் என் பிரிவினையாக பேசுகிறார்கள். அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விமர்சனம் செய்கிறார்கள் ஏன் இந்த மன நிலை…

ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக அமைச்சர் றிஷாட் பதியுதீனை எப்படியாவது புத்தள மக்களிடம் எதிரியாக கட்ட  வேண்டும் என்ற மனநிலையில்  இந்த அரச நியமனத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறார்கள் என்று தான் என்ன தோன்றுகிறது…

புத்தளம் மாவட்டத்தில் பாராளமன்றா உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.நகரசபை அதிகாரம் பிரதேசபை அதிகாரம் புத்தளத்தில் இருக்கும் போது அமைச்சர் நியமனத்தை எவ்வாறு வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு வழங்குவார் அப்படியென்றால் இவர்கள் எல்லாம் தூக்கத்திலே இருக்கிறார்கள் ஏன் அபாண்டத்தை அமைச்சர் மீது சுமத்தி அதில் இன்பம் காண முயற்சிக்கிறீர்கள்….

அமைச்சர் றிஷாட் பதியுதீன் புத்தளம் மக்கள் வடமாகாண மக்கள் என இரண்டாக பிரித்து பார்க்கும் தலைவர் அல்ல என்பது புத்தளம் வாழ்  அதிகமான மக்களுக்கு தெரியும் ஒரு சில அரசியலில் ஆசை கொண்டவர்கள் தான்   அமைச்சர் மீது அபாண்டத்தை சுமத்தி தனது இயலாமையை மறைத்து இவ்வாறு பொய்யான போலியான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் இந்த பிரதேசவாத பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடாது என்பது இவர்களுக்கு வெகுவிரைவில் தெரிய வரும்.

Related posts

முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு நான் எழுதும் திறந்த மடல்

wpengine

வெள்ளிமலை உள்ளக விதிகளுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

wpengine