பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில்  இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கொழும்பு வர்த்தக சங்க தலைவர் டாக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. 
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, வி இராதாகிருஷ்ணன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஏழை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

wpengine

இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட் -நிதி அமைச்சர் ரவி

wpengine