பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்மானம் அரசியல் கோணம்

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை குறித்த வாக்கெடுப்பின் போது கடுமையான தீர்மானத்தை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இன்று அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்பது தனக்கு தெரியாது எனவும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தனது தீர்மானம் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது அரசியல் கோணத்தில் அதனை பார்க்காது, நாட்டை பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மைத்திரியின் வீடு ,செயலகம் முற்றுகை

wpengine

வெற்றிப்பாதையை நோக்கி அமைச்சர் றிஷாட் தலைமையிலான மக்கள் காங்கிரஸ்!

wpengine

Rishad’s wife writes to the President

wpengine