பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்த வேண்டும் ராவணா பலய அமைப்பு கடும் எச்சரிக்கை

அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிங்கள நாடாளுமன்ற உறு்பினர் தமது வாக்குகளை பயன்படுத்தாவிட்டால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்களுக்க எதிரான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ராவணா பலய அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சியின் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தில் மாத்திரமல்ல இந்த நாட்டில் இருப்பதற்கும் தகுதியற்றவர். சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஆதரிக்கின்றார்களா அல்லது எதிர்க்கின்றார்களா என்பதை நாம் அவதானிப்போம்.

ரிசாட் பதியுதீனை தோல்வியடையச் செய்வதற்கு அவர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தாவிட்டால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்களுக்கு எதிரான எமது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஞானசார தேரரைக் கைது செய்ய குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை

wpengine

முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக அதனை செய்ய முடியாது

wpengine

சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது

wpengine