பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்காது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.


பதியூதீனுக்கு எதிராக உத்தியோகபூர்வ குற்றச்சாட்டோ அல்லது பயங்கரவாதத்திற்கு உதவினார் என்பதற்கான முறைப்பாடோ இல்லை.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு ஆதரவளிப்பது அல்லது ஆதரவளிப்பதில்லை என முடிவை தனித்தனியாக எடுக்கும் தீர்மானம் அல்ல.

அதனை கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

மைத்திரி வங்குரோத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் மகிந்தவின் வங்குரோத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன இணைந்து கொண்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு துள்ளி குதித்து ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சமூகத்தை காப்பாற்றும் நோக்கிலேயே, நாம் இந்தப் பிரதேசத்தில் களத்தில் இறங்கியுள்ளோம் அமைச்சர் றிஷாட்

wpengine

முசலி மண் மீட்பு போராட்டம்! மூக்கை நுழைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போட வேண்டாம் -அலிகான்

wpengine

வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள்! ஜனாதிபதி இணைத்துக்கொள்ள நடவடிக்கை

wpengine