பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் தலைமையில் முசலியில் கிளை மறுசீரமைப்பு

(முசலியூர் அஸ்ஹர்)

இன்று.18.03.2018 முசலிப் பிரதேச சபைக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களிலுமுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளைகள் யாவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் மறுசீரமைக்கப்பட உள்ளன.

அதிரடியான இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப்,கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் போன்றோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

பிரதேச சபைத்தேர்தலின் பிற்பாடும்,மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் இப்பணி முடுக்கி விடப்பட்டிருப்பது சாலச்சிறந்தது.

புதுவெளி வட்டாரம்,கூளாங்குளம் வட்டாரம் என்பன கைநழுவியமை கவலைக்குரிய விடயமாகும்.

அதேவேளை மு.கா,வசமிருந்த வட்டாரங்கள் கைப்பற்றப்பட்டமை பாராட்டத்தக்கது.

புதுவெளி,கூளாங்குளம் என்பன மு,கா.பக்கம் சென்றுவிட்டது என்பது அர்த்தமாகாது.

அவர்களோடு பேசிய போது அவர்கள் அமைச்சர் றிசாதின் பக்கம் நிற்பதை அறிய முடிகிறது,போடப்பட்ட அபேட்சகர்கள் மீதான விருப்பு வெறுப்பே இங்கு செல்வாக்குச் செலுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

கிராமியபள்ளிவாயல்கள்,சங்கங்கள்,கழகங்கள் என்பனவும் முக்கியமானவை அவற்றின் கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும்.

முசலி வட்டாரத்திலிருந்து பிரதிநிதியை வடமாகாண சபைக்கு அனுப்புவதில் அனைவரும் ஒன்றிணைவோம்.

தேர்தல் பழைய முறையில் நடப்பதே நன்மையாக இருக்கும்.

Related posts

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!

Editor

சிராணி விஜேவிக்ரம (பா.உ) மோதல்! ஒருவர் உயிரிழப்பு

wpengine

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அனுபவம் அமைச்சை வழிநடத்த ஒத்துழைப்பாக அமையும்

wpengine