வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மன்னார், மட்டக்களப்பு, வடக்கிலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்வோம். நான் பொறுப்புடன் சொல்கின்றேன் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்புவிடுத்துள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் 300 ஏக்கர் காணி கிடைத்தது எவ்வாறு? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் தேரர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர்,
அமைச்சர்கள் தேர்தல் காலத்தில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் லஞ்சம் குறித்தும் தேடுவதற்கு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
மத்திய வங்கி, ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் இற்கு ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவது போல அமைச்சர்கள் வழங்கும் அரசியல் லஞ்சம் குறித்தும் விசாரணை செய்ய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் அவரது குடும்பத்துக்கும் 300 ஏக்கர் காணி கிடைத்தது எவ்வாறு? இன்றும் அதற்கான எந்தவித பதிலும் கிடையாது. இவருக்கு மத்திய கிழக்கிலுள்ள பல்வேறு முகவர்களுடன் தொடர்பு இருக்கின்றது.
நாம் ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வாருங்கள், அம்பாறையிலிருந்து ஆரம்பிப்போம். மட்டக்களப்பு, வடக்கிலுள்ள மன்னார், முல்லைத்தீவுக்கும் செல்வோம்.
நான் பொறுப்புடன் சொல்கின்றேன். மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் ஒவ்வொருவரும் 50 ஏக்கர் கணக்கில் காணிகளைப் பிடித்து வைத்துள்ளனர் என்றார்.