பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டை சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் சிங்கள அரசியல்வாதி

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையென நிரூபிக்கப்படுமானால் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த வழி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாடாளுமன்றில்  கடும் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படும்.

wpengine

கல்விப்பணி புரிந்தோரை காலம் அழிக்காது

wpengine

தேசிய ரீதியான போட்டியில் முசலி-ஜின்னா (அகத்திமுரிப்பு) 2ஆம் இடம் (படங்கள்)

wpengine