அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற டயஸ்போராவின் வேட்கைக்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் பலியாகியுள்ளார்கள்.
ஒரு பக்கம் தமிழ் இனவாதிகள் இன்னொரு பக்கம் சிங்கள இனவாதிகள் மற்றுமொரு பக்கம் அரசின் துரோகங்கள் என பல்முனை தாக்குதல்களுக்கு அமைச்சர் ரிசாத் முகம் கொடுப்பதை பார்க்கும் போது நான் பெரிதும் அச்சப்படுகிறேன்.
அவர் தனது மக்ஜளுக்கும் ஏனைய பிரதேச மக்களுக்கும் தன்னாலான சேவைகளை செய்யவேண்டும் என துடிப்பாக செயற்படுகிறார். அவர் நினைத்தால் தனது அமைச்சை அரசுக்கு மட்டும் சேவை செய்வதாக காட்டிக்கொண்டு காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு ஏனைய அமைச்சர்கள் போல் நிம்மதியாக இருக்கலாம். அவ்வாறில்லாமல் பல சேவைகளை தலைமேல் அள்ளிப்போட்டுக்கொண்டு அரசியலில் சமூகத்தின் விடி வெள்ளியாய் செயற்படும் ஒரு மனிதனை அழிக்கத்துடிக்கிறார்கள்.