பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் சில சிங்களவாதிகள் அழுத்தம்

அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என தென்னிலங்கை மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இவ்வாறான நிலையில் தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் ரிசாத்துக்கு எதிராக மக்கள் பாரியளவிலான பதாதைகள் வைத்துள்ளனர்.

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதராவாக வாக்களிக்காமல் மீண்டும் ஊருக்கு வர வேண்டாம் என அந்த பதாகையில் எழுதப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் பெண்கள் தாம்பத்திய உறவு கொள்வது எப்படி! சூடு பிடித்துள்ள புத்தகம்

wpengine

அரசியல்வாதிகளே! தமிழ்,முஸ்லிம் இனவாதம் வேண்டாம்.

wpengine

இரசாயன மூலப்பொருள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி நிறுவனங்களுக்கு சீல் வைப்பு!

Editor