கௌரவ றிசாத் பதியுதீன் அவர்கள் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் வடபுல முஸ்லிம்கள் சுதந்திரமாக சென்று மீள்குடியேறக் கூடிய சூழல் நிலவவில்லை.
முஸ்லிம் மக்கள் வாழ்ந்த பூர்வீகக் கிராமங்கள் விடுவிக்கப்பட்டு இருக்கவில்லை.
ஆனால் வன்னி யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கி இருந்த 300 00 குடும்பங்களை இவரால் குடியேற்ற முடிந்தது.
நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தும் என்னால் வடபுல முஸ்லிம்களை கௌரவமாக மீள்குடியேற்ற முடியவில்லையே என்ற கவலை இவரை வெகுவாக வாட்டியது.இவரின் பின்னர் மீள்குடியேற்ற அமைச்சர்களாக இருந்தோர் இம்மக்களின் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டனர்,இதில் அதிருப்தி அடைந்த எமது அமைச்சர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்படது.
இதைச் செயற்படாமல் தடுக்க ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியும்,தமிழ் அரசியல் வாதிகளும் முயன்றதை காணமுடிந்தது.
நல்லாட்சி அரசு விசேடமாக இம்மக்களின் நிதியை ஒதுக்கி கைத்தொழில் வர்த்தக அமைச்சிடம் ஒப்படைத்திருந்தது.இதனூடாக வீடமைப்புத் திட்டங்கள் அமுல்ப்படுத்ப்பட்டுக்கொண்டிருந்த வேளை,ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்தால் மீள்குடியேற்ற பிரதியமைச்சரான திரு காதர் மஸ்தான் அந்த நிதியை எப்படியாவது கழற்றி அரசியல் செய்ய முயன்றார்.
மதில் கட்டுதலுக்கு பணம் வழங்குதல்,துவிச்சக்கர வண்டி வழங்குதல் போன்றன இடம்பெற்றன.
தமக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்ச நிலைமை மக்களிடம் உருவானது.51 நாள் போராட்டத்தின் பின் வெற்றி கிடைத்தது.
இதன் பின் உருவாக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு ஏற்கனவே வகித்த அமைச்சுடன் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.
கடந்த காலங்களில் மீள்குடியேற்ற அமைச்சர்போல மக்களுக்கு மீள்குடியேற பலவகைகளிலும் பாடுபட்டு பெற்றுக் கொடுத்த ஆயிரக்கணக்கான வீடுகளும்,மீள்குடியேற்றக் கிராமங்களும் சாட்சிகளாக உள்ளன.
மாற்றுக் கட்சிக்காரர் களநிலவரம் புரியாமல் வடக்கில் எங்காவது மீளக்குடியேறிய ஒருவரின் ஓலைக்கொட்டில் படத்தைப் பிரசுரித்து.அமைச்சர் றிசாத் பதீயுன் இம்மக்களுக்கு சேவை செய்யவில்லை என்ற ஒரு பொய் மாயப் பிரசாரத்தை மேற்கொண்டு வந்ததைக் காண முடிந்தது.