பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டினால் நியமனம் செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப்

(பாத்தீமா முகநூல்)

மன்னார் மாவட்டம் முசலிப்பிரதேசத்தைச் சேர்ந்த தேசமான்ய, தேசகீர்த்தி, அகில இலங்கை சமாதான நீதவான் அல்ஹாஜ் அலிகான் ஷரீப் வடமாகாண சபையின் உறுப்பினராக  வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஆசிரியராக, உதவிக் கல்விப்பணிப்பாளராக, பிரதிக்கல்விப் பணிப்பாளராக, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளராக சேவையாற்றியுள்ளதுடன் மீள் குடியேற்றத்திற்கான அமைச்சு, மீள் குடியேற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு, வர்த்தக கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் இணைப்புச் செயலாளராகவும் மீள் குடியேற்ற செயலணி, இலங்கை காரிய வளக்கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் ஆவார்.

சிறந்த அரசியல் இலக்கிய மேடைப் பேச்சாளரும் பல விருதுகள் பெற்ற கவிஞரும் ஆவார்.

இவர் முசலிப்பிரதேச மணற்குளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் சுலைஹா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வருமாவார்.

Related posts

அவதானம் . ! ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில்…

Maash

ஹக்கீமின் “கொட்டை”பாக்கு கதை! பாக்கு வெட்டியுடன் முஸ்லிம்கள்.

wpengine

மன்னாரின் இயல்பு நிலை மூன்றாவது நாளாகவும் பாதிப்பு

wpengine