அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சதொச நிறுவனத்தில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரிகள் எனக் கூறி, நிறுவனத்தில் இருந்து அமைச்சர் பதியுதீன் மாதாந்தம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார். சிரமப்பட்டு நிரூபிக்க வேண்டியது எதுவுமில்லை.
ரிசார்ட்டின் பணத்தில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
தெரிவுக்குழுவினால், அவர் நிரபராதி என்று பரிந்துரைக்கவும் இல்லை. ஜனாதிபதி அவருக்கு மீண்டும் அமைச்சு பதவியை வழங்கியதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதேபோல் ரிசார்ட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்.
பயங்கரமான திருடனுக்கு எதிராக எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் வேட்பாளரை மனதார வாழ்த்துகிறேன்.
பொதுஜன பெரமுன நிறுத்தும் வேட்பாளர் பொது வேட்பாளராக இருப்பார். அவரது வெற்றிக்காக பாடுபடுவேன். தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.