பிரதான செய்திகள்

றிசாத் வடபகுதியிலுள்ள பௌத்த பிக்குகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறார்- சிங்­கள ராவய

(விடிவெள்ளி)

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் வட­ப­கு­தி­யி­லுள்ள பௌத்த பிக்­கு­க­ளுக்­கி­டையில் பிள­வு­களை                  உரு­வாக்கி தொடர்ந்தும் காடு­களை அழித்து முஸ்லிம் குடி­யேற்­றங்­களை நிறு­வி­வ­ரு­கிறார்.

பிக்­கு­களின் ஒற்­று­மை­யைக் குலைப்­ப­தற்­காக வவு­னி­யாவில் பிக்­கு­க­ளுக்கு இல­வச வைத்­திய முகாம் நடாத்­தி­யுள்ளார். இதனை வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம் என சிங்­கள ராவய அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனாவின் ஊடக மாநாட்­டிலும் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனின் பிக்­கு­க­ளுக்­கான இல­வச வைத்­திய முகாம் ஏற்­பாட்­டினை சிங்­கள ராவ­யவும், பொது பல­சே­னாவும் எதிர்த்­தி­ருந்­தன.

வடக்­கிலும் கிழக்­கிலும் தமிழ், முஸ்லிம், சிங்­கள சமூ­கத்­தி­ன­ரி­டையே இன  நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­ப­தற்­கா­கவே பிக்­கு­க­ளுக்­கென இல­வச வைத்­திய முகாம் ஏற்­பாடு செய்­யப்­பட்டு                           நடாத்­தப்­பட்­டது.

இதில் மறை­மு­க­மாக எந்த நோக்­கமும் இல்லை. இதனை எதிர்க்கும் தேரர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் இது கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பௌத்த பிக்­கு­க­ளுக்­கான இல­வச            வைத்­திய முகாம் வவு­னி­யாவில் சங்க போதி விகா­ரையில்  நேற்று நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் வடக்கு கிழக்கு பௌத்த சங்க சபையின் பிர­தான தேரர் சியம்­பல விம­ல­சா­ர­தேரர், உழுக்­குளம் ஸ்ரீ கமா­பதி சும­ண­தி­லக தேரர், வெலி­ஓய திஸ்ஸ தேரர் ஆகியோர் கலந்து கொண்டு உரை                நிகழ்த்­தி­னார்கள்.

யுத்­த­கா­லத்­திலும், தற்­போதும் வவு­னி­யாவில் உத­வி­பு­ரியும் ஒரே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் ஆவார். வேறு எந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் உதவி செய்­ய­வில்லை. மஹிந்­தவின் காலத்தில் அமைச்சர் ரிசாத் நல்­லவர் என்று கூறிய தேரர்கள் ஏன் இப்­போது எதிர்க்­கி­றார்கள் என்று தெரி­ய­வில்லை என நிகழ்வில் தேரர்கள் கருத்து வெளி­யிட்­டனர்.

சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதத்த தேரர் கிரு­லப்­பனை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­நி­கழ்த்­து­கையில்      தெரி­வித்­த­தா­வது அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் வில்­பத்து காடு­களை அழித்து தற்­போது பொல­ந­றுவை சோமா­வதி புனித பூமிக்­கு­ரிய காடு­களை அழித்து முஸ்லிம் குடி­யேற்­றங்­களை நிறுவும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ளார்.

அடிப்­ப­டை­வாத முஸ்­லிம்­களைக் குடி­யேற்றும் ஏற்­பாடே இது­வாகும். காடுகள் அழிக்­கப்­பட்டு         குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­ப­டு­வதால் அப்­ப­குதி மக்கள் ரிசாத் பதி­யு­தீனை எதிர்க்­கி­றார்கள்.         இந்­நி­லையில் வடக்குப் பகுதி பிக்­குகள் மத்­தியில் கருத்து வேறு­பா­டு­களை உரு­வாக்கி அவர்­களை பிள­வு­ப­டுத்­து­வதே ரிசாத்தின் திட்­ட­மாகும். இதற்­கா­கவே அவர் பிக்­கு­க­ளுக்கு இல­வச வைத்­திய முகாமை நடத்­து­கிறார்.

வட­மா­காண ஆளுநர், வட­மா­காண முத­ல­மைச்சர், அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அனை­வரும் தமிழ், முஸ்லிம் மக்­களின் நலன்­க­ளையே கவ­னிக்­கி­றார்கள். இவர்கள் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கு மட்­டு­மான பிர­தி­நி­தி­களல்­ல வடக்கு சிங்கள மக்­களின்               பிரச்­சி­னை­களும் தீர்க்­கப்­பட வேண்டும்.

சம்பந்தன் தமிழர்களுக்கு மட்டுமான எதிர்க்கட்சித்தலைவரல்லர். முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவராவார். சம்பந்தன் தனது பொறுப்பை உணர்ந்தும் செயற்பட வேண்டும்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் பௌத்த தேரர்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்துவதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதி முடிவு நாளை – அமைச்சர் பைசர் முஸ்தபா

wpengine

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை! எனக்கு அதிகாரம் இல்லை குணசீலன்

wpengine

கணவனின் காதல் லீலை! மனைவி தற்கொலை

wpengine