Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள, புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும், இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யுனெஸ்கோ (UNESCO) பணிப்பாளரும், பிரதிநிதியுமான ஷிகேரு அஒயாகியை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாத் பதியுதீன் இன்று (17/06/2016) தனது அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில், கடந்த காலங்களில் யுனெஸ்கோ கல்வி, கலாச்சாரம் தொடர்பில் இலங்கைக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கு, அமைச்சர் றிசாத் நன்றிகளை வெளிப்படுத்தினார்.

அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் கல்வி, கலாசாரத்தை மேம்படுத்த  யுனெஸ்கோ முன்னர் பல்வேறு பங்களிப்புக்களை நல்கி இருக்கின்றது. எனினும் அந்தப் பிரதேசங்களுக்கு மேலும் யுனெஸ்கோ உதவ வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இங்கு எடுத்துரைத்தார். d39c501d-9365-42e7-9ec5-2ae1ad8d3b0332d1fac1-2e64-4b87-9476-1162d997721c

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *