கட்டுரைகள்பிரதான செய்திகள்

அமைச்சர் ரிசாத் பதியுதீனை வசைபாடி திரிவோர் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

(ஐ.எம்.மிதுன் கான்)

சேவைகள் மூலம் மக்கள் மனதை வென்ற நாயகன் அமைச்சர் ரிசாத் பதியுதீன். இவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாத  சிலரும், சுய இலாபங்களுக்காக அமைச்சரிடம் இருந்து விளகிச்சென்றவர்களும் இவரைப்பற்றி வசைபாடித்திரிவதானது கண்டிக்கத்தக்க விடயமாகும். பேரினவாதிகளின் பல சதிப்பின்னல்களையும் தாண்டி முஸ்லிம் சமூகத்துக்காக போராடி பல வெற்றிகளை கண்டவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.

தற்போது இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரு பெரும் பலம் பொருந்திய தலைவனாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் திகழ்கிறார். இலங்கையில் எந்த மூலையில் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அங்கே விரைந்து சென்று களத்தில் நின்று அப்பிரச்சினைக்கு முடிவு கொடுத்து விட்டு வரும் முதல் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வீடமைப்பு வசதிகள், பாதைகள் புனரமைப்பு, வடக்கில்  புதிய பாடசாலைகள், பல துறையிலும் அரச நியமனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவற்றில் பற்பல வேலைவாய்ப்புக்கள் இவ்வாறு எண்ணிலடங்கா பல உதவிகளை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்காக செய்து கொடுத்த மற்றும் செய்துகொண்டிருக்கும் இந்த தலைவனை வீணாக விமர்சித்துக்கொண்டிருக்கும் ஒருசில அரசியல் அடிவருடிகள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இவ்வாறு அரசியல் சுய இலாபங்களுக்காகவும் மஞ்சள் கவர்களுக்காகவும் ஏமாந்து அமைச்சரின் பெயரை கலங்கப்படுத்த முயற்சிப்பதானது உங்களுக்கும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்கும் நீங்களே அடித்துக்கொள்ளும் சாவுமணியாகும். ஒரு சாமானியனாக இருந்து நீங்கள் சிந்தித்தால் இக்கருத்தின் உண்மைத்தன்மை உங்கள் எண்ணங்களை தெளிவு படுத்தும்.

“காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி” என்பது போல தனது பதவியையும் சுகபோக வாழ்க்கையையும் காப்பற்றிக் கொள்வதற்காக அமைதியாக காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பல முஸ்லிம் அமைச்சர்கள் காணப்படுகின்ற போதிலும் மக்களுக்காக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட பற்பல தியாகங்களை செய்து மக்களுக்காக உழைக்கும் மாமனிதர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கே அதிக விமர்சனங்களும், விசாரணைகளும் வந்து கொண்டிருப்பதானது அவர் சரியான பாதையில் இருக்கின்றார் என்பதை உலகுக்கு தெளிவு படுத்துகின்றது. இன்றைய தொடர் மின்னல் நிகழ்ச்சியையும், சிங்கள அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட விவாத நிகழ்ச்சிகளையும், போலி முகநூல் விமர்சனங்களையும் இவற்றுக்கு சான்றாக கூறலாம்.

21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இனவாதத்தை தூண்டும் இனவாதியாக பலராலும் விமர்சிக்கப்படுகின்ற மின்னல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரங்கா அவர்கள் தனது சுய அரசியல் இலாபத்துக்காக  அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தொடர்ச்சியாக பல நச்சுக்கருத்துக்களை முன்வைத்து மூக்குடைபட்டுக்கொண்டிருப்பதானது மக்கள் யாவரும் அறிந்ததே. அமைச்சர் ரிசாத்திடம் இருந்து விளகிச்சென்றவர்களையும், அவருக்கு எதிராக செயல்படுகின்றவர்களையும் அழைத்து வந்து  அவர்களை உசுப்பேத்தி அமைச்சருக்கு எதிராக பேச வைத்து முஸ்லிம் மக்கள்களுக்கிடையிலே பிரச்சனைகளையும் பிளவுகளையும்  உண்டு பண்ணிக்கொண்டிருக்கும் ரங்காவின் உண்மையான முகம் என்னவென்பது சமூக வலைத்தளங்களில் வெளியான ரங்கவால் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் மின்னல் நிகழ்ச்சி தொடர்பான காணொளியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அமைச்சர் ரிசாத்தின் குறைகளை தேடித்திரியும் சகோதரர் ரங்காவுக்கு ஒரு தனிப்பட்ட வேண்டுகோள். நீங்கள் இவ்வாறு அமைச்சரின் குறைகளைத்தேடி அவற்றை மக்களுக்கு படம் போடுக்காட்ட வேண்டும் என நினைத்து போலிக்கருத்துக்களையும் விமர்சனங்களையும் செய்து  மேலும் மேலும் மூக்குடையாமல், தமிழ் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தேடியறிந்து உரியவர்களுக்கு தெரியப்படுத்தினால் அம்மக்களின் வாழ்க்கையும், உங்கள் வாழ்க்கையும், சக்தி தொலைக்காட்சியின் எதிர்காலமும் சிறந்து விளங்கும் என்பதை நீங்கள் புரிந்து செயல் பட்டால் நன்றாக இருக்கு.

உண்மைத்தன்மை இவ்வாறு இருக்கையில் இம்மின்னல் நிகழ்ச்சியையும், அதில் பேசப்படும் விடயங்களையும் பொருட்டாக என்னி அவற்றை தூக்கிப்பிடித்துக்கொண்டு அடிவருடிகள் விமர்சனங்களை மேற்கொள்வதானது சிறுபிள்ளைத்தனமாகும். ஒரு சிறந்த தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒரு உதாரணமாவார். யார் எவ்வாறான வதந்திகளை பரப்பினாலும் மறைக்க முடியாத உண்மை இதுவே. ஆகவே காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அமைச்சருக்கு எதிராக செயல்படுகிறோம் என நினைத்துக்கொண்டு தனக்கும், தங்கள் சந்ததிக்கும், முழு முஸ்லிம் சமூகத்துக்கும் துரோகம் செய்துகொள்ளாமல் தவிர்ந்து நடத்தல் சிறந்ததாகும்.

Related posts

சண்முகா பாடசாலை ஆசிரியர் விவகாரம்! யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் கண்டனம்.

wpengine

நாட்டின் பிள்ளைகள் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும்!-ஹம்மாந்தோட்டையில் சஜித்-

Editor

ஹக்கீமை போன்று றிஷாட் நடந்துகொள்ள கூடாது! புத்தளத்தில் நாகரீகம் தவறிய ஹக்கீம்

wpengine