உத்தேச புதிய அரசியலமைப்புக்கு எதிராக இணைந்து செயற்படும் நோக்கத்துடன், அமைச்சர் நிமல் சிறிபாலவின் தலைமையில் சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் இரகசியமாகப் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு எதிரான அம்சங்களுடன் உத்தேச புதிய அரசியலமைப்பு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுமாயின் அதற்கு அமைச்சர் நிமல் சிறிபால தலைமையில் கூட்டாகச்சேர்ந்து, எதிர்த்து வாக்களிப்பதற்கு இந்த இரகசிய பேச்சுவார்த்தையின்போது சம்பந்தப்பட்ட சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பதிய அரசியலமைப்பு விடயத்தில் மாத்திரமன்றி அரசாங்கத்தின் ஏனைய அனைத்து உத்தேச தீர்மானங்கள் தொடர்பிலும், அவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளுக்கும், நிலைப்பாடுகிளுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவற்றிற்கு எதிராக அமைச்சர் நிமால் சிறிபால தலைமையில் தனியான குழுவாக இயங்கி எதிர்ப்பதற்கு மேற்படி இரகசிய பேச்சுவாரத்தையில்,தீர்மானிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தால் உத்தேச பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, அரசுக்கு எதிராக கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுடன், இணைந்து செயற்படுவதற்கும், அமைச்சர் நிமால் சிறிபால தலைமையிலான இந்த சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் உறுதியாக தெரியவந்துள்ளது.