பிரதான செய்திகள்

அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல என கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்திய அதிகாரிகளின் பட்டியலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவும் உள்ளடங்குகின்றார், என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்றைய தினம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையில் சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை!
-ஜனாதிபதி-

Editor

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Editor

இலங்கையில் 2021 டிசம்பரில் உணவுப் பொருட்களின் விலை 22.1% அதிகரித்து

wpengine