பிரதான செய்திகள்

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை நீதிமன்றத்திலே சந்திப்போம்

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அன்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

அவர் சட்ட நடவடிக்கை எடுத்தால் நான் அதை வரவேற்கின்றேன் காரணம் எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கு ஏற்படும்.

ஏன் என்றால் நான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயக உட்பட்ட நடவடிக்கைகளே. வெறுமனே தாங்கள் நினைத்தது போன்று எங்களை குற்றம் சாட்ட முடியாது. சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் நீதிமன்றத்திலே அவற்றை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம்கள் இந்த கட்டத்தில் நிதானமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்

wpengine

ஒரு பிள்ளைக்காக இரு தாய்கள் உரிமை கோரல்

wpengine

தமிழ்,முஸ்லிம் மக்களை எனக்கு எதிராக திசை திருப்பட்டார்கள் – மஹிந்த

wpengine