பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றத்திற்கான பணிகள் நிறைவு

புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதயின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக, ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அறிக்கை லண்டன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலர் சமன் எக்கநாயக்கவிடமும் அந்த அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் படி தேசிய அரசாங்கத்தில் 48 அமைச்சர்களை நியமிக்க முடியும். ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க, பிரதமரின் செயலாருடன் இணைந்து, புதிய அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையின் விபரங்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

றிஷாட்டின் கைதுக்கு எதிராக வவுனியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்!

wpengine

எந்த காலத்திலும் இணையத்தளங்கள் தடைசெய்யப்பட மாட்டாது!- ஜனாதிபதி

wpengine

புத்தர் சிலை விவகாரம்! நல்லாட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றது.

wpengine