பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அமைச்சரவை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்! யாழ் அதிபர்

ஓய்வுபெற 3 மாதங்களே உள்ள நிலையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தனது பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.


ஓய்வு பெறும் வரையிலும் தான் விரும்பிய மாவட்டத்திலேயே பணி செய்யவிருப்பதாகவும், இடமாற்றம் செய்தால் பதவியிலிருந்து விலகுவதாகவும் முன்னர் தெரிவித்திருந்தார்.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த அறிவிப்பு நாகலிங்கன் வேதநாயகனால் வெளியிடப்பட்டுள்ளது.


அத்துடன் இன்று மதியம் 2 மணிக்கு நாகலிங்கன் வேதநாயகத்திற்கு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வடக்கின் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் இடமாற்றம் செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்று கடந்த ஐந்தாம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் வட மாகாணத்தின் இரு மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ஏனைய மூன்று மாவட்ட செயலாளர்களும் தேர்தல் அறிவிப்பிற்கு முன் இடமாற்றம் செய்வதற்காகவே இவ்வாறு அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதாக அரசியல் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.


இதேவேளை யாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவருகிறது.

Related posts

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

wpengine

தயா கமகேயின் இனவாதத்தை வேடிக்கை பார்க்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

wpengine

அக்கரைப்பற்றில் அநியாயமாக இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையீடு

wpengine