(வை எல் எஸ் ஹமீட்)
அமைச்சர்களின் வகை
——————————
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் சரத்து 43
அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர் சரத்து 44
பிரதியமைச்சர் சரத்து 45
இதற்கு மேலதிகமாக வேறு எந்தவகையான அமைச்சர்களும் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறாயின் மூன்று அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களும் 17 ராஜாங்க அமைச்சர்களும் என்று மேலதிகமாக ஒருவகை ஏன் சேர்க்கப்பட்டது? சேர்க்கப்பட முடியுமா?
பதில்:
இதுவரை அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர்களை நடைமுறையில் ‘ ராஜாங்க அமைச்சர்’ என அழைத்தார்கள். இப்பொழுது அமைச்சரவை அங்கத்தவரல்லாத அமைச்சர், ராஜாங்க அமைச்சர் என்று மேலதிகமாக சேர்த்தது உண்மையில் குழப்பகரமானது. இதற்குரிய காரணத்தை அரசு இன்னும் விளக்கவில்லை.
அதேநேரம், இன்றைய Dailymirror பத்திரிகையில் ஒரு பெயர் குறிப்பிடவிரும்பாத non Cabinet அமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருப்பது;
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் எந்தவொரு Cabinet அமைச்சரின் கீழும் வரமாட்டார்கள். அவர்கள் உரிய அமைச்சருக்கு வழங்கப்பட்ட சில விடயதானங்களுக்கு பொறுப்பாக இருந்து சுயமாக இயங்குவார்கள். ஆனால் அவர்கள் அமைச்சரவைக்கு செல்லமாட்டார்கள். அவர்களுடைய cabinet paper கள் பிரதமரினூடாக சமர்ப்பிக்கப்படும். அவர்களுக்கென்று தனியாக செயலாளர்கள் இருப்பார்கள்; என்பதாகும்.
இதனைப்பார்க்கும்போது அவர்களுக்கு 44(2) இல் குறிப்பிடப்பட்டதுபோன்று தனியான அமைச்சு வழங்கப்பட இருப்பது புலப்படுகிறது. ( இது தொடர்பாக முன்னைய கட்டுரையைப் பார்க்க)
இதிலிருந்து ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியான அமைச்சு வழங்கப்பட மாட்டாது; என்பதும் புலப்படுகிறது. அமைச்சு வழங்காமல் சில விடயதானங்களை வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை.
பெரும்பாலும் ராஜாங்க அமைச்சர்களும் பிரதியமைச்சர்களுக்கு சமாந்திரமானவர்களாகவே இருக்கலாம் அதிகாரம் எதுவும் இல்லாமல். கௌரவத்திற்காக பெயர் மாத்திரம் ராஜாங்கமாக இருக்கலாம்.
இங்கு எழுகின்ற சட்டரீதியான கேள்வி, இவ்வாறு நாலாவது வகையான அமைச்சர்களை நியமிக்க முடியுமா? என்பதாகும்.
நாலாவது வகை நிமிக்க முடியாது. பெரும்பாலும் non cabinet அமைச்சரும் ராஜாங்க அமைச்சரும் ஒரே வகையாக இருக்கலாம். அதாவது non cabinet அமைச்சர். அதில் ஒரு பகுதியினருக்கு அதிகாரம் வழங்கலாம். அடுத்த பகுதியினருக்கு வழங்காமல் விடலாம்.
இந்த அமைச்சர்களுக்கு வெவ்வேறு பெயர்களை வைக்கலாம். அதாவது ராஜாங்கம் அல்லது வேறு பெயர்களையும் வைக்கலாம். தடையேதுமில்லை. காரணம் இந்த இரண்டாவது வகையை அமைச்சரவையில் அங்கத்துவம் வகிக்காத அமைச்சர்கள் என்றே 44(1) இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இரு தரப்பினரது நியமனப்பத்திரத்திலும் அமைச்சரவை அங்கத்தரவரல்லாத அமைச்சர் என்பது ஏதோ ஒருவிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது நான்காவது வகையாகிவிடும். அது சட்டவிரோதமாகிவிடும்.
நியமனப் பத்திரத்தைப் பார்த்தால்தான் மிகுதியைக் குறிப்பிடலாம்.