பிரதான செய்திகள்

அமைச்சரவையில் பல மாற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தோனேஷிய விஜயத்தின் பின்னர் அமைச்சரவையில் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி இந்தோனேஷியாவை நோக்கி செல்லவுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 8ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி அமைச்சரவையில் திருத்தம் ஒன்று மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதற்கமைய நிதி, மீன்பிடி, மின்சக்தி, ஊடகம், சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலை மற்றும் துறைமுக அமைச்சில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அமைச்சரவை திருத்தத்தை தாமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கை பொருளாதாரம் தொடர்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு பிரதமர் கோரியுள்ளார்.

சமகால அரசாங்கதிலுள்ள சில அமைச்சர்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டே அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் தனியான கூட்டணியில் போட்டியிட சஜித்

wpengine

சஜித்துடன் இணைந்தவர்கள் ஐ.தே.கட்சியில் இருந்து நீக்கம்.

wpengine

எனக்கு பெரும் அவமானம்! விடுதலை வேண்டும் -சுசந்திக்கா

wpengine