உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க வான்வழி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பலி!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு கதீஜா என அழைக்கப்படும் அப்துல்லா மக்கிமுஸ்லிஹ் அல்-ரிஃபாய், அமெரிக்க வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈராக்கின் அல் கான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலின் போது அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்காவும் ஈராக்கும் உறுதிப்படுத்தியுள்ளன. 

உலகிலேயே ஆபத்தான பயங்கரவாத நபர்களின் பட்டியலில் ஒருவராக அபு கதீஜா கருதப்படுவதாக அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது. 

குறித்த தாக்குதலை அமெரிக்க மற்றும் ஈராக் உளவுத்துறை இணைந்து நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்தத் தாக்குதலில் மற்றொரு சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் “ஈராக்கில் தப்பி ஓடிய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார். 

எங்கள் துணிச்சலான போராளிகள் அவரை இடைவிடாமல் பின்தொடர்ந்தனர்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

கத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

wpengine

பொஸ்னியாவில் முஸ்லிம்களைக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!

wpengine

நயன்தாராவின் காதல் தின செய்தி

wpengine