பிரதான செய்திகள்

அமெரிக்கா ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம் அவர்களுக்கு இலங்கை உலமா கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தங்களின் வெற்றி பெற்றி உலகமே சந்தேகம் கொண்டிருந்த நிலையில் தங்களின் வெற்றியானது அமெரிக்க மக்களின் சுதுந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான வெற்றியாகவே பார்க்கிறோம். இந்த வகையில் இலங்கை மக்களின் சார்பிலும் இலங்கை முஸ்லிம்கள் சார்பிலும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே வேளை தங்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் நாடுகளுடனும் உலகளாவிய முஸ்லிம்களுடனும் மிகப்பெரிய புரிந்துணர்வும் நட்பும் ஏற்படுவதற்கான சிறந்த நடவடிக்கைகளை மேற் கொள்வீர்கள் என இலங்கை முஸ்லிம் உலமா கட்சி நம்புகிறது. அன்பு மற்றும் பரிந்துணர்வின் மூலமே உலகில் நிம்மதியையும், சாந்தியையும் கட்டி எழுப்ப முடியும் என்ற எமது நம்பிக்கை நிறைவேறும் என எதிர் பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்யா கண்மூடித்தனமான தாக்குதல் பதவிகளை இழந்த பூட்டின்

wpengine

சான் அல்விஷ் – மாணவனின் விபத்தினையை ஏன்? ரோயல் கல்லுாாி மூடி மறைத்தது?

wpengine

20க்கு இருபது உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்

wpengine