உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் கட்டார் விஜயம்

சவுதி அரேபியா உட்பட நான்கு வளைகுடா நாடுகள் கட்டாருடனான உறவை முறித்துக் கொண்ட நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இன்று கட்டாருக்கு விஜயம் செய்துள்ளார்.

கட்டார் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயற்படுவதாக் குற்றம் சாட்டி சவுதி அரேபியா, பஹ்ரேன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் மீது தடைகளை விதித்ததுடன், கட்டாருடனான இராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.

கட்டார் மீதான பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவர சவுதி உள்ளிட்ட நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கட்டார் நிராகரித்திருந்தது. இந்நிலையில், இந்த இக்கட்டான நிலையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் இராஜாங்க செயலாளர் ஆராய்வார் என அவரது சிரேஷ்ட ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில், கட்டாரில் உள்ள துருக்கி இராணுவ விமானத் தளம் மூடப்பட வேண்டும், கட்டாரை தளமாகக் கொண்ட அரேபிய தொலைக்காட்சி வலையமைப்பான அல்-ஜசீரா நிறுவனம் மூடப்பட வேண்டும் போன்றவை உள்ளடங்கியுள்ளன.

Related posts

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

wpengine

அமைச்சர் றிஷாத் பதியுதீனை தவறாக சித்தரிக்கும் நோக்கத்திலேயே ஆப்பாட்டம் மஹிந்த தெரிவிப்பு

wpengine

உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சி! மொத்த வியாபாரம் செய்கின்றது அமைச்சர் றிஷாட்

wpengine