உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்கா வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலியானார்கள்

இதனையடுத்து ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 51 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 15 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. 27 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது,

நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம் என அவருடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.

எனினும், கனமழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஜேசன் ருன்யென் கூறியுள்ளார். அது நேற்றிரவு மட்டுமின்றி இன்று காலையும் தொடரும் என அவர் கூறியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

wpengine

வளைகுடா நாடுகளுக்கு கடத்த இருந்த அரிய வகை  கடல் அட்டை உயிருடன் பறிமுதல்

wpengine

மு.காவின் இயலாமையை வெளிப்படுத்தும் ஹனீபா மதனியின் ஒரு மடல்

wpengine