உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான அமெரிக்காவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கச்சா எண்ணெய்யின் விலை சுமார் 2% ஆல் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, பிரென்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 1.17 டொலர்களால் அதிகரிக்கலாம் என்றும், பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 79.54 டொலராக அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.02 டொலர்கள் அதிகரிக்கலாம் எனவும், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.78 டொலர்களாக அதிகரிக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் ஏப்ரல் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் மார்ச் மாதம் 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
விலை சூத்திரத்தின்படி, மே மாதத்திற்கான விலை திருத்தம் நாளை (01) மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.