பிரதான செய்திகள்

அமீர் அலி தலைமையில் ஐ.தே.க.மனு தாக்கல்

(அனா)

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை இன்று திங்கட்கிழமை (11)காலை செலுத்தியது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கும் பிரதியமைச்சர் கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச சபையினை கைபற்றும் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் கைப்பற்றப்படும் முதலாவது சபையாக கோறளைப்பற்று இருக்கும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தகாலத்திலும் இல்லாத அளவுக்கு வேட்பாளர்கள் அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் இணைத்து இந்த பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்கட்சி ஒரு கூட்டமைப்பினை உருவாக்கி அம்பாறை மாவட்டத்திலும் இலங்கையின் வேறு பாகங்களிலும் போட்டியிடுவதற்கு அந்த கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது.

தேர்தல் கூட்டு என்பது கட்சிகளிடையே கொள்கையுடன் ஒத்துப்போகும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

மு.காவின் இயலாமையை வெளிப்படுத்தும் ஹனீபா மதனியின் ஒரு மடல்

wpengine

நெல்,மரக்கறி இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

wpengine

ஜூன் 1 முதல், இறகுமதிக்கு தடை விதிக்கப்படவுள்ள 14 பொருட்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு!

Editor