பிரதான செய்திகள்

அமித் வீரசிங்க புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் தொடர்பு.

மஹாசோன் பலகாய எனப்படும் அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என தெரியவந்துள்ளது.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இந்த மஹாசோன் பலகாய என்னும் அமைப்பும் செயற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தொடர்புகளை பேணியுள்ளமை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மஹாசோன் பலகாய என்னும் அமைப்பின் பிரதானியாக அமித் வீரசிங்க என்ற நபர் செயற்பட்டு வருகின்றார். அண்மையில் இவர் கைது செய்யப்பட்டதுடன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபரும் பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் தொடர்பு பேணியமை தெரியவந்துள்ளது.

திகன, தெல்தெனிய சம்பவங்களின் போது அமித் வீரசிங்கவுடன் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தனர் என தெரியவந்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்களை விடுவிக்க முடியாத நிலை .

Maash

நீர்கொழும்பில் பெருந்தொகை சட்டவிரோத மாத்திரைகளுடன் மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது .

Maash

சமூக ஊடகம் ஊடாக பெண்களுக்கு பாதிப்பு அரசு நடவடிக்கை

wpengine