பிரதான செய்திகள்

வடிகானினை சரியான முறையில் அமைப்பதற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆலோசனை

(எம்.ரீ. ஹைதர் அலி)

மக்களின் மிக நீண்ட கால தேவையாக காணப்பட்ட அமானுல்லாஹ் வீதிக்கான வடிகானினை அமைத்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூகிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து கிழக்கு மாகாண சபையின் மூலம் சுமார் 17 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அமானுல்லாஹ் வீதிக்கு வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் அண்மையில் நாட்டிவைக்கப்பட்டது.

தற்போது இத்திட்டம் அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வடிகானானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களுடன் 2016.10.05ஆந்திகதி உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.unnamed-6

இதன் போது அமானுல்லாஹ் வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்து, உரிய முறையில் வடிகானினை அமைப்பதற்கான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார்.unnamed-7

Related posts

ஊழல் விசாரணை! விக்கிக்கு பதில் கொடுத்த டெனீஸ்வரன்

wpengine

1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு

wpengine

மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் அனுப்பி வைக்க வேண்டும்.

wpengine