கிழக்கு மாகாணத்தில் தனியான அரசாங்கம் ஒன்று செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பொலிஸார் செயற்படுவதனை பார்க்கும் போது பயத்தை ஏற்படுத்தும் நிலை காணப்படுகிறது. அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக கிழக்கு மாகாணம் முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதம் பரவி வருகிறது.
இது குறித்து பதில் பொலிஸ் மா அதிபரும், பாதுகாப்பு செயலாரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்லாம், வஹாப்வாதிகளின் இனவாத செயற்பாடு, கிழக்கு மாகாணத்திலுள்ள சில பொலிஸ் அதிகாரிகளை கோடீஸ்வரர்களாகியுள்ளதாக ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.