பிரதான செய்திகள்

அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட வேண்டாம்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியிடுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட முற்படும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை சமூகமட்டத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் வகையில் செய்திகளை வெளியிடக் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் அடியோடு ஒழிக்க முஸ்லிம் சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை பாதுகாப்புத்துறைக்கு வழங்கும்.

முஸ்லிம்களின் துளியளவும் ஆதரவில்லாத ஒரு சிறிய தரப்பே இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளை போன்று சித்தரிப்பதை அனுமதிக்க முடியாது.

ஊடகங்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும். ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பாதுகாப்புத்துறையினரும் இது குறித்து உன்னிப்பாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக காட்டும் வகையில் சில பிரசாரங்கள் இடம்பெறுகின்றன. பொறுப்புணர்வுடன் மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக பல பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இத்தேடுதல் வேட்டைகளின் போது சில ஊடகங்கள் நேரடியாக அழைத்துச் செல்லப்படுகின்றன எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்து வீடு பொருத்தமானவை -பேராதனை பல்கலைகழகம்

wpengine

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து பார்க்கட்டும்

wpengine

தனிநபர் முற்பண வருமான வரி பாரிய அளவில் அதிகரிப்பு!

Editor