பிரதான செய்திகள்

அப்பாவி முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகளை தூண்ட முயற்சி

சாதாரண முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தை அடுத்து ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் எமது சமூகத்தில் உள்ள சிறு குழுவால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த சம்பவங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத அப்பாவி முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து சிலர் தமது அரசியல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காக வன்முறைகளை தூண்ட முயற்சி செய்து வருகின்றனர்.

நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சில குழுக்களால் தாக்கப்படுள்ளது என்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேலை எவ்வாறு கூட்டமாக வந்து தாக்குதல் மேற்கொண்டனர் என்பதை ஆராய வேண்டும்.

இவர்களின் இந்த நடவடிக்கைகளை தடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு சட்டம், ஒழுங்கு அமைச்சர் என்ற ரீதியில் உங்களுக்கு உள்ளது.

இது முஸ்லிம்களின் புனித மாதமான ரமழான் மாதமென்பதால் முஸ்லிம்கள் அதிகமாக இரவு நேர வணக்க வழிபாடுளில் ஈடுபடுவர்.

ஆகவே இந்த நேரங்களில் ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நல்லாட்சியினை காப்பாற்ற மீண்டும் பைசர் முஸ்தபா

wpengine

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine

அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது-சஜித்

wpengine