Breaking
Sat. Nov 23rd, 2024

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பாக அதிர்ச்சிகர தகவல்கள் ஊடகங்களில் நாளாந்தம் வெளிவந்தவண்ணம் உள்ளன அந்தவகையில் சாள்ஸ் நிர்மலநாதன் தொடர்பான நேரடி ஸ்கான் றிப்போட்  உங்களுக்காக

யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறையை பூர்விகமாக கொண்ட இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் மன்னாரில் உள்ள பிரான்சிஸ் என்றபிறைஸ் என்னும் நிறுவனத்தில் குடும்ப வறுமைகாரணமாக கணக்கு பதிவாளராக வேலையில் சேர்ந்தார்

இந்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகளுக்கு மன்னார் மாவட்டம் ஊடாக பொருட்களை வன்னிக்கு கடத்தவும் மன்னாரில் நிதி சேகரிக்கவும் சாள்ஸ் நிர்மலநாதன் நியமிக்கப்பட்டார்.சாள்ஸ் நிர்மலநாதனால் செய்யப்பட்ட கடத்தல் வியாபரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் சிலர் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் சுட்டுகொல்லப்பட்டுஇருந்தனர்.

இந்நிலையில் சாள்ஸினால் மன்னார் மாவட்டத்தில் மீனவர் சங்கங்களில் சேகரிக்கப்படும் பணம் வன்னிக்கு அனுப்பப்பட்டுவந்தது. இதே நேரம் முள்ளிவாய்காலில் தமிழர் போராட்டம் முற்றுப் பெற்ற பொழுது சாள்ஸ் நிர்மலநாதனிடம் பல கோடி மதிப்புள்ள மீனவர் சங்கங்களில் சேகரித்த பணம் சாள்சிடம் இருந்து. இவ்வாறு தமிழர் உரிமை மீட்புக்கு ஏழை மீனவர்களால் வழங்கப்பட்ட பணத்தில் பின்வரும் சொத்துகள் சாள்சினால் கொள்வனவு செய்யப்பட்டது.
1)பள்ளிமுனை வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம்

2)தற்போதைய சாள்ஸ் நிர்மலநாதனின் அலுவலகம் அமைந்துள்ள வீடு

3)ஓலைத்தொடுவாயில் உள்ள காணி

4)மன்னார் அரச வைத்தியசாலையின்
4ம் விடுதிக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதி

5)வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொகுசு வீடு

6)பள்ளிமுனையில் உள்ள வீடு

யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவப் புலனாய்வுதுறையினால் புலிகளின் பினாமிகள் கைது செய்யப்பட்டிருந்தனர் அந்தவகையில் தன்னிடம் இருந்த பணத்தை பாதுகாக்கவே அரசியலில் பிரவேசித்தார் சாள்ஸ்.

முதலில் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு  தோல்வி அடைந்த சாள்ஸ் தன்னிடம் இருந்த விடுதலைப்புலிகளின் பெருமளவு பணத்தை செலவு செய்து கடந்த முறை நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக்கட்சியில் போட்டியிட்டு  வெற்றி அடைந்தார்.

சாள்ஸ் தன்னை அரசியலில் தக்க வைக்க முதலில் கையில் எடுத்தது மதவாதமாகும் .அதற்காக முதலில் சாள்ஸ் செய்தது வங்காலை பங்கு தந்தை மார்க்ஸ் அடிகளாருக்கு 2 மில்லியன் ரூபா தனது பன்முகப் படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கி பாதிரியாரின் நன்மதிப்பை பெற்றார்.அதேவேளை மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சிவராத்திரி தினத்திற்கு முதல்நாள் இந்துக்கள் தற்காலிக அலங்காரவளைவு அமைத்துக் கொண்டிருக்கும் போது சாள்ஸ் தனது.
உறவினாரன இயேசு என்பவரையும் உஷா என்பவரையும் தூண்டிவிட்டு இந்துகள் அமைத்த அலங்கார வளைவை உடைப்பித்தார்
அதேவேளை மாக்கஸ் அடிகளாரை சம்பவவிடத்திற்கு அனுப்பி மேலும் கலகத்தை பெருப்பித்தார்.

மாந்தையில் ஒன்றாக சிவராத்திரி கொண்டாடிய கத்தோலிக்கர்களும் சைவர்களும் சாள்சின் சூழ்ச்சியால் உடைக்கப்பட்டு இன்று மன்னார் நீதிமன்றத்தில் சாள்சின் சுயலாப அரசியலுக்காக எதிர் எதிர் கூண்டில் நிற்கின்றார்கள்

மேலும் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்துவதற்கு மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் சாள்ஸ்.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளங்குளம் கிராமத்தில் விடுதலை புலிகளால் உருவாக்கப்பட்ட மரமுந்திரகை பண்ணை காணப்படுகின்றது இந்த பண்ணையை மரமுந்திரகை கூட்டு தாபனத்திற்கு பெறுவதற்கான கலந்துரையாடல் பத்திரமுல்லையில் 18/04/2019 ம் திகதி நடைபெற்றது

இந்த கூட்டத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு குணபாலனும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு கேதிஸ்வரனும் கலந்து கொண்டனர் .இந்த கலந்துரையாடலில் குறித்த மரமுந்திரகை தோட்டமானது மரமுந்திரகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்க முடியாது என பிரதேச செயலாளரும் உதவி அரசாங்க அதிபரும் மறுப்பு தெரிவித்து விட்டனார். இந்நிலையில் குறித்த இடத்தை பார்வையிட வந்த மரமுந்திரகை கூட்டு தாபன அதிகாரிகளை சந்தித்து பேசியதோடு தானே மரமுந்திரகை தோட்டத்தை மீட்டதாகவும் உண்மைக்கு புறம்பாக பத்திரைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி வழங்கினார் சாள்ஸ்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அரச உயர் அதிகாரி ஒருவர் யாரே பெற்ற பிள்ளைக்கு பாரளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அப்பாவாக பார்கிறார் என தெரிவித்தார்.

இதே வேளை பிரதேச செயலாளகளால் தெரிவு செய்யப்பட்ட சமூர்த்தி பயனாளிகளை தானே தெரிவு செய்தாக மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றார் சாள்ஸ்

இவ்வாறன ஒரு ஏமாற்று பெயர்வழியும் தனது சுயலாப அரசியலுக்காக எதனையும் செய்யக்கூடியவரும் தொடர்ந்து வன்னி மாவட்டத்தில் பாரளுமன்ற உறுப்பினராக இருப்பராயின் வன்னியில் தொடர்ந்து இன சண்டை மத சண்டை என தமிழ் மக்களின் வாழ்வு பின்னோக்கி செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *