பிரதான செய்திகள்

அப்துல் கலாமின் பிறந்த நாளுக்கு இந்தியா தூதரகம் அழைப்பு

யாழ். இந்திய துணைத் தூதரகமானது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத் ரத்னா கலாநிதி A.P.J அப்துல் கலாம் அவர்களின் 86ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடவுள்ளது.

இதை முன்னிட்டு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி காலை 9.00 மணிக்கு குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் A.P.J அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு இந்திய துணைத்தூதுவரால் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள தமிழ் நாட்டின் பிரபல பேச்சாளர் சுகிசிவம் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 

Related posts

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!

wpengine

வவுனியா சிங்கள மக்களுக்கு வீடுகள் அமைச்சர் றிசாத் அடிக்கல் நாட்டினார்.

wpengine

குடிவரவு குடியகல்வு சட்டங்களை கடினப்படுத்துவது அவசியம்

wpengine