பிரதான செய்திகள்விளையாட்டு

அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்

மன்னார் – வவுனியா வீதியில் அமைந்துள்ள மன்னார் தொழில்நுட்ப கல்லூரி, கட்டையடம்பன் பாடசாலை, யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்பவற்றுக்கு முன்பாக மாணவர்களின் நலன் கருதி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் பஸ் தரிப்பிடங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது, குறித்த இடங்களுக்கு விஜயம் செய்த அமைச்சர் மேற்கொள்ளப்படும் செயற்திட்ட முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்ததோடு அவை துரிதகதியில் நடைபெற்று நிறைவுறும் நிலையில் இருப்பதை பார்வையிட்டார்.

மேலும் கடந்த வருடம் செம்மண்தீவு பகுதியில் நன்னீர் மீன்பிடியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சந்தைத்தொகுதி ஒன்று அமைச்சரினால் கட்டிக்கொடுக்கப்பட்டது, கடந்தவருடம் நிதி போதாமையினால் சந்தைத்தொகுதிக்கான மலசலகூடம் மற்றும் வேறுசில வேலைகள் நிறைவுசெயயப்படாமல் இருந்தது அவற்றுக்கு இந்தவருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன தற்போது அவையும் முடிவுறும் தருவாயில் இருக்கின்றது.fe9a5a8b-969c-46a4-9db3-4fc8c1258aa3

இவ்வருடம் பல்வேறு வேலைத்திட்டங்கள் வருட இறுதிவரை இழுத்தடிக்கப்படாது விரைவாக முடிவுறும் நிலையில் உள்ளமையினால் இந்தவருட ஒதுக்கீடுகள் வருட இறுதிக்கு முன்னதாகவே முடிவடைய இருப்பதாகவும் அதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டிருகின்ற ஒப்பந்தகாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் அமைச்சர் அவர்கள் நன்றிகளை தெரிவிப்பதோடு, அர்ப்பணிப்போடு அதிகாரிகள் செயற்படுவார்களானால் ஒரு ரூபாயும் திரும்பிச்செல்லாது முற்று முழுதாக கிடைத்த நிதியை செயற்படுத்தலாம் என்றும் அதேவேளை தமது அமைச்சின் அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவதை சுட்டிக்காட்டி அவர்களுக்கும் விசேட நன்றிகளையும் தெரிவித்தார்.4a12b367-e94d-4e1c-a6e4-c502337f25e5

cf3820a2-9f9c-4bef-a21c-54389eca5137

Related posts

காத்தான்குடி ஆற்றங்கரையில் பெண்கள், சிறுவர்களுக்கான விஷேட பூங்கா

wpengine

ஜனாதிபதி மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டி நன்றாக நாடகமாடுகிறார்.

wpengine

வட மத்திய மாகாண புதிய அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம்

wpengine