பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அபாயா அணிந்த முஸ்லிம் பெண் உழியர்களுக்கு புடவை கட்டிபார்த்த மன்னார் மாவட்ட செயலகம்

மன்னார் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் ஒரு சில முஸ்லிம் பெண் உழியர்களுக்கு பிடிக்காத அசம்பாவிதம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

மேலும் அறிகையில் கடந்த மே மாதம் 19ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலக திறப்பு விழா இடம்பெற்றது. இதற்கு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களையும் வைத்து படம் எடுக்கப்பட்டதாகவும்,அதில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்கள் தங்களுடைய கலாச்சார முறைப்படி “அபாயா” மற்றும் “ஈஷ்காப்” அணிந்து படம் எடுத்துள்ளார்கள்.

அதன் பின்பு மாவட்ட செயலகத்தின் புத்தக வெளியிட்டுக்காக படம் எடுக்கப்பட்ட முஸ்லிம் பெண் உழியர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய அனுமதியினை கூட பெறாமல் அவர்களுடைய அபாயா அணிந்த பகுதியினை நீக்கி விட்டு சாரி கட்டிய வேறு பெண்களுடைய உடம்புகளை பொருத்தி உள்ளதாக அறியமுடிகின்றது.

இந்த விடயம் தொடர்பில் மாவட்ட செலகத்தில் கடமையாற்றும் சில முஸ்லிம் பெண் உழியர்கள் மிகவும் மன வேதனையில் உள்ளதாகவும் தகவல் கிடைக்கபெற்றுள்ளன.

எங்களுடயை முகத்திற்கு  ஏனையோரின் உடம்பை பொருத்திய விடயத்தை பொறுத்துகொள்ள முடியாது எனவும்,இதனை எங்களுடைய கலாச்சாரத்திற்கு பொறுத்தம் இல்லையென்று மிகவும் கவலையுடன் பேசி உள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இந்த அசம்பாவிதம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உழியர்கள் மனித உரிமை ஆணையகம் மற்றும் தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுவிக்க வேண்டும் எனவும் சக உழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சர்,வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்க அதிபர் கரிசனை எடுத்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுகோள்விடுக்கின்றோம்.

Related posts

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine

சமூக கடப்பாடுகளின் சமகால நிலைப்பாடுகள்

wpengine

தொகுதி அமைப்பாளர் நியமனம்

wpengine