Breaking
Mon. Nov 25th, 2024

(எம்.ரீ. ஹைதர் அலி)

காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள அன்வர் பாடசாலை வீதி, விடுதி வீதி 5 ஆம் ஒழுங்கை, மற்றும் அதன் உள்ளக வீதிகள் அடங்கலாக அப்பகுதியின் அதிகமான வீதிகள் புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படுகின்றது. அதிகமான மக்கள் பயன்படுத்தும் இவ்வீதிகளானது கற்கள் நிறைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதோடு மழைக் காலங்களில் அதிகளவான மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக இப்பகுதி மக்களும் இவ்வீதியினை பயன்படுத்துகின்றவர்களும் அதிக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இவ்வீதிகளை 2016.09.07ஆந்திகதி நேரில்சென்று பார்வையிட்டார்.unnamed-2

இதன்போது இப்பிரதேச மக்களை சந்தித்து இவ்வீதிகளின் அபிவிருத்தி சம்மந்தமாக தெளிவுபடுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், காத்தான்குடி அப்றார் நகர், நூரானியா மாவத்தை பிரதேசங்களில் இவ்வாறான நீண்ட காலமாக புனரமைக்கப்படாத அதிகளவான வீதிகள் காணப்படுகின்றது. இவ்வீதிகள் அனைத்தையும் புனரமைப்பு செய்வதற்கு குறைந்த பட்சம் 10 கோடி ரூபாய் அளவான பாரிய நிதி தேவைப்படும். இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் பூரனப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வருடத்தில் இவ்வீதியை புனரமைக்க முடியாவிட்டாலும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வருடத்திற்கான கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடுகளில் இவ்வீதிகளை உள்வாங்கி புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அல்லது வேறு ஏதேனும் திட்டங்களினூடாக இவ்வருடத்திற்குள் இவ்வீதிகளை புனரமைப்பு செய்ய முயற்சிகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மக்களிடம் வாக்குறுதியளித்தார்.unnamed

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *