கட்டுரைகள்பிரதான செய்திகள்

அன்சீல், ஹசன் அலி ஹக்கீமுக்கு எதிராக ஒரு போர்க்கொடி!

மிக விரைவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளன. தற்போது அம்பாறை மாவட்டத்தில் அன்சீல் ஹசன் அலி நிந்தவூர் பொத்துவில் முன்னாள் தவிசாளர்கள் இணைந்து ஹக்கீமுக்கு எதிராக ஒரு போர்க் கொடி தூக்கி வருகின்றனர்.

இந்தப் போர்க்கொடி ஒரு சிறிய வாக்குச் சரிவை ஏற்படுத்தும் என்பது சாதாரண கணிப்பீடு. இதில் அன்சீல் தாங்கி நிற்கும் பாலமுனை வாக்குகள் ஹக்கீ

முக்கு ஒரு சரிவைக் கொடுக்கும்.

அதனால் அன்சீலை தற்காலிக நீக்கம் செய்தாலும் அன்சீல் மீது சற்று பயந்து கொண்ட ஹக்கீம் கல்முனையில் உள்ள ஹக்கீம் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் மூலமாக பொத்துவில் அட்டாளைச்சேனை நிந்தவூர் முன்னாள் தவிசாளர்கள் பெருந்தொகை பணம் கொண்டு பேரம் பேசப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரத்தில் சிக்குண்ட சிலர் ஹக்கீமுடன் இணைந்துள்ளனர்.ஆனால் இதில் அட்டாளைச்சேனை முன்னாள் தவிசாளர் அன்சீல் உறுதியாக உள்ளார்.எந்தவொரு பணப் பேரம் பேசலுக்கும் தான் விரும்பவில்லை என்கின்றார்.

ஹக்கீம் அணியினர் திருந்தி வியாபார நோக்கில்லாமல் மக்களுக்கான கட்சியாக மாறினால் மட்டுமே ஹக்கீமுடன் பயணிக்க முடியும் என்கின்றார்.

அதாவுல்லாவுடன் இணைவதை மறுக்கும் அன்சீல்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டு பகிரங்க மேடைகளில் ஹக்கீமை விமர்சித்து வரும் பாலமுனை சட்டத்தரணியும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அன்சீலை கடந்த மாதம் ஹக்கீம் தனது கட்சியில் இருந்து நீக்கி விட்டார்.

கடந்த மாதம் ஹக்கீம் தலைமையில் கட்சியின் உயர் பீடத்தைக் கூட்டி அன்சீலை மு.கா. அங்கத்தவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய இரண்டு பதவிகளிலும் இருந்து கட்சி ஏகமனதாக தற்காலிகமாக நீக்கியுள்ளன.

இந்நிலையில் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியில் அன்சீல் இணையவுள்ளார் என்ற ஒரு தகவல் வெளியானதையெடுத்து நாம் அன்சீலை தொடர்பு கொண்டு கேட்ட போது அது பொய்யான வதந்தி என்றும் அதாவுல்லா கட்சியில் இணையும் எந்தவொரு நோக்கமும் தேவையுமில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார்.

அதாவுல்லா என்னும் மூழ்கும் கப்பலில் ஏறுவதற்கு அன்சீலுக்கு என்ன பைத்தியமா? இந்த வதந்தியை இல்லை இந்த வாந்தியை அதாவுல்லா அணி கசிய விட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எமக்கு வந்துள்ளது.

அதாவுல்லாவிடம் இணையும் நோக்கம் இருந்திருந்தால் எப்போதோ இணைந்திருப்பேன் என்றார்.அத்துடன் றிசாத் பதியுத்தீன் அணியிலும் இணையும் நோக்கிமில்லை என்றார்.எந்தக் கட்சியிலும் இணையும் நோக்கமில்லை என்று மேலும் தெரிவித்தார்.

விரைவில் கிழக்குத் தேர்தல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அன்சீல் எடுத்துள்ள போராட்டம் பாரிய சவாலை ஹக்கீமுக்கு ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் அன்சீலின் போராட்டத்தை ஒளிக்க அவரது பயணத்தை தடுக்க அன்சீல் வகித்து வந்த மு.கா.பாலமுனை அமைப்பாளர் பதவியை ஹக்கீம் தானே தானாக விரும்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

இதன் மூலமாக மு.கா. அணி கொண்ட பாலமுனை வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற கணக்கில் உள்ளார்.

ஆனால் பாலமுனையில் அன்சீல் இல்லாத மு.கா.வாக்குகளை ஹக்கீமால் தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி பலமாகவுள்ளது.

இதே நேரம் ஹக்கீம் போடும் முள்ளுத் துண்டுக்கு வாலாட்டும் முஸ்லிம் கூட்டம் பலமாகவுள்ளது. அதனால் பாலமுனையில் அன்சீலுக்கு நிகராக யாராவது ஒரு புதுமுகத்தை ஆசை வார்த்தை கூறி பசப்பு வார்த்தைகளைக் கொண்டு களமிறக்கலாம்.யார் பெத்த பிள்ளையோ சும்மா பணத்தை செலவு செய்து நஸ்டப்படப் போவுது.

அதனால் ஹக்கீம் பாரிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளாராம்.எதிர்வரும் கிழக்குத் தேர்தலில் பாலமுனையில் முகாமிட்டு நிந்தவூர்,பாலமுனை, பொத்துவில் ஆகிய இடங்களை நோக்கி ஹக்கீம் பவனி வரப்போகின்றாராம்.

சில இடங்களில் தேவை ஏற்பட்டால் பணத்தை வீசி எறிந்து காங்கிரஸ் வாக்குகளை சிதற விடாமல் தக்க வைத்துக் கொள்ளவுள்ளாராம்.

இங்கு அன்சீல் நினைப்பது போன்று ஹக்கீமோ ஹக்கீம் சார்ந்தவர்களோ ஒரு போதும் திருந்துவது என்பது இம்மியளவும் நடக்கப்போவதில்லை..அன்சீல் இன்னும் நாங்கள் மு.கா.தான் என்கின்றார்கள்.அதனால் இங்கு முரண்பாடுகள் உள்ளன.

இந்த நிலையில் அன்சீல் அணியினர் எதிர்வரும் கிழக்கு மாகாணத் தேர்தலில் மு.கா இல்லாமல் எந்த அணியில் இருந்து தேர்தலை சந்திக்கவுள்ளார்கள்.

ஒன்று இவர்கள் மீண்டும் ஹக்கீமுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் அல்லது றிசாத் அணியுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.தனி அணியாகவோ அல்லது சுயேட்சையாகவோ இறங்கி ஒன்றும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாவி பீஸ் ஹசன் அலி

அன்சீல் அணியில் உள்ள ஹசன் அலி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக ஒரு இலவச எம்பிக்காக ஹக்கீமுக்காக ஆமாசாமி போட்டுக் கொண்டு சும்மா கதிரையைச் சூடாக்கிய ஒரு நம்பிக்கை நட்சத்திரம். கட்சியின் விசுவாசி அவ்வளவுதான்.

ஹசன் அலி என்பவர் நிந்தவூர் தொட்டு அம்பாரை மாவட்டம் முழுவதும் ஒரு செல்லாக்காசி. தன்னையும் வளர்க்காமல் தனது அரசியலையும் வளர்க்காமல் சும்மா பத்திரிகை அறிக்கை விட்டு இலவச எம்பியால் வலம் வந்த ஒரு அப்பாவி பீஸ். இந்தப் பீசால் அன்சீல் அணிக்கு எவ்விதமான பிரயோசனமும் கிடையாது.

ஹசன் அலிக்குப் பின்னால் யாருமே இல்லை. அந்தளவு ஹசன் அலி யாரையும் வளர்க்கவுமில்லை. மு.கா என்னும் மரத்தில் வளர்ந்த ஒரு இலை.இந்த இலையால் ஹக்கீமை அசைக்க முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லுவோம்.

ஹசன் அலிக்கு இன்று இரவு எம்பி தருகின்றோம் நீங்கள் நம்ம தலைவரை எதிர்த்து நிற்கலாமா என்று ஹக்கீம் அணி ஹசன் அலியிடம் பேச்சு வார்த்தை நடத்தினால் மறு நிமிடமே ஹசன் அலி ஹக்கீமிடம் சரண்டர்.

அதன் பின்பு ஹக்கீமுக்கு துதி பாடிக் கொண்டு அன்சீல் அணிக்கு எதிராக அறிக்கை விடுவார்.

இப்படிப்பட்ட மகானை நம்பி அன்சீல் அணி நிற்பது என்பது ஆரோக்கியமான பயணம் அல்ல. ஹக்கீம் செய்துள்ள முஸ்லிம்களை விற்று அடகு வைத்துள்ள பல மகா மோசமான விடயங்கள் ஹசன் அலியிடம் நிறைந்துள்ளன. புதைந்துள்ளன. ஹசன் அலி ஹக்கீம் போன்று பொய் பேசமாட்டார். நம்பிக்கை மோசம் செய்யமாட்டார்.

அதனால் ஹசன் அலி ஹக்கீமின் உண்மைகளை அள்ளி எறிந்தால் பல விபரீதங்களை ஹக்கீம் சந்திப்பார் ஹசன் அலி இவை எவைகளையும் சொல்லாமல் ஹக்கீம் திருந்த வேண்டும் என்றால் இது என்ன பாலர் பாடசாலையா?

ஹக்கீம் செய்துள்ள தில்லாலங்கடி வேலைகள் அத்தனையும் ஹசன் அலிக்குத் தெரியும்.ஹசன் அலி வாய் திறந்தால் அம்பாரையை விட்டு ஹக்கீமை மக்கள் துரத்தியடிக்கும் நிலை உருவாகும்.ஹக்கீமை தோற்கடிக்கவோ அல்லது ஹக்கீமை கட்சியை விட்டு துரத்தவோ ஒரு போதும் ஹசன் அலி விரும்பவில்லை.

ஹக்கீம் திருந்த வேண்டும் என்ற ஒரேயொரு நிபந்தனை மட்டும்தான் ஹசன் அலியின் பரப்புரையாக உள்ளது. சில நேரம் இந்தப் பரப்புரை சூடு பிடித்தால் ஹசன் அலி நிறையவே வாய்திறக்கலாம்.

ஹசன் அலி வாய் திறந்தால் ஹக்கீம் ஹசன் அலி பற்றிய தில்லாலங்கடி வித்தைகளை இறக்குவார். அதனால்தான் ஹசன் அலி ஹக்கீம் பற்றி இன்று வரை எவ்விதமான குற்றச்சாட்டுக்களையும் சொல்லவில்லை.

மோசடி,வஞ்சகம்,குத்து வெட்டு,ஆளை ஆளை வெட்டுதல், குளிபறிப்பு,காலை வாருதல்,பிணத்தின்மேல் உணவு உண்ணுதல் போன்ற கொடிய செயல்களை செய்யும் ஒரு சாக்கடை அரசியல் இன்று நடைபெற்று வருகின்றன.

இந்த துறையில் நாடி,நரம்பு,நாளம், இரத்தம்,உடம்பு முழுவதும் ஊறிப்போனவர்களை திருந்த வேண்டும் என்றால் நடக்குமா?

அதனால் ஒரு பலமான பின்புலம் மற்றும் பணபலம் இல்லாமல் அன்சீல் அணியினர் ஹக்கீமை அசைக்க முடியாது என்பதை நாம் எத்தி வைப்போம்.

ஒரு பலமான அணியின் துணையின்றி ஒரு சிறிய குழுவால் அரசியலில் சாதிக்க முடியாது என்பதை நாம் கடந்த பல தேர்தல்களில் கண்டிருப்போம்.

இதே நேரம் ஹக்கீம் ஒரு சிறிய கிராமமான பாலமுனைக்கு அமைப்பாளர் பதவியை தானே பெற்றுள்ளதானது தமிழ் சினிமாவில் வரும் காட்சி போன்று கதாநாயகி தனக்குத் தானே மஞ்சள் கயிற்றைக் கொண்டு சாமி முன்னிலையில் நின்று தாலி கட்டுவது போன்ற கன்றாவிக் காட்சி போல் உள்ளது.

ஹக்கீம் அன்சீல் மேல் பயந்து விட்டார்.கிழக்குத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அன்சீல் அணியினர் நல்ல திட்டம் போட்டு வேறுபாதையில் பொத்துவில் தொட்டு நிந்தவூர் வரை நல்ல களம் அமைத்தால் 2 மாகாண சபை உறுப்பினர்களை ஹக்கீடம் இருந்து தட்டிப் பறிக்கலாம்.அடுத்து வரும் பொதுத் தேர்தலில் 2 எம்பிக்களையும் ஹக்கீமிடமிருந்து தட்டிப்பறிக்கலாம்.

இப்படியான திட்டங்கள் இல்லாது இப்போது நடத்தி வரும் பரப்புரை என்பது வெறும் கும்மாளமாகி விடும் அன்சீல் அணி என்பது மீண்டும் ஹக்கீம் அணியியிலா? அல்லது றிசாத் அணியிலா என்பதை எதிர்வரும் கிழக்குத் தேர்தல் தீர்மானிக்கும்.

Related posts

மன்னார் பொது வைத்தியசாலையின் அசமந்தபோக்கு! தீர்வு கிடைக்குமா?

wpengine

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஏற்படுமா ?

wpengine

சம்பந்தன் ஐயாவுடன் சேர்ந்து ஹக்கீம் முஸ்லிம்களை சிறு குழுவாக காட்டினார்.

wpengine