அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட ஒன்பது பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக நேற்றைய தினம் கொழும்பில் உள்ள வைத்தியசாலை சதுக்கத்திலும் சுகாதார அமைச்சுக்கு அருகிலும் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் நேற்று நண்பகல் 12.00 மணி முதல் இன்று சனிக்கிழமை மாலை 05.00 மணி வரை வைத்தியசாலைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் போராட்டக்காரர்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.