பிரதான செய்திகள்

அனைத்து தேர்தல்களும் தாமரை மொட்டுச் சின்னத்தில்

எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்தில் மாத்திரமே போட்டியிட போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் (மகிந்த அணி) நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வேலைத்திட்டம் ஒன்றின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவர்கள் பொதுஜன பெரமுன அணியுடன் இணைந்துள்ளனர். தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தேவையான பின்னணியை உருவாக்குவோம். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டது போன்று அடுத்த தேர்தல்களில் போட்டியிடுவோம்.

கம்பஹா மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிரான சகல அரசியல் கட்சிகளை இணைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசபந்து தென்னகோன் குற்றவாளி : பாராளுமன்ற விசாரணைக் குழு அறிக்கை!!!

Maash

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் facebooK

wpengine

அரச உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம்.

wpengine