Breaking
Sun. Nov 24th, 2024

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில்  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அனுர சேனநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினர் இன்று இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

நேற்று  முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விசாரணை  செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் கீழான சிறப்புக் குழு முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் வீரகேசரிக்கு தெரிவித்தன.

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தில் குற்றத்தை மறைத்தமை, சாட்சிகளை அழித்தமை,  விசாரணைகளை நிறுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந்த படுகொலை விவகாரம் தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு அமைவாகவும், முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை கைது செய்து விசாரணை செய்ததிலும் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவே அனுர சேனநாயக்கவிடம் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று முற்பகல் வேளையில்  குற்றப் புலனாய்வுப் பிரிவிவுக்கு முதன் முறையாக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, அன்றைய தினம் இரவு 11.30 மணி வரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந் நிலையில் இன்று அவர் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு  நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே வஸீம் தாஜுதீனின் படுகொலை இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் நாரஹேன்பிட்டி, சாலிகா மைதான பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் பிரிவான நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அப்போதைய  போக்கு வரத்து பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சரத் சந்திர சம்பவம் குறித்து நீதிமன்றுக்கு இரகசிய வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார்.

கடந்த  திங்களன்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ{க்கு அவரது அறையில் வைத்து, குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 127 ஆவது சரத்துக்கு அமைவாக அவர் இந்த வாக்கு மூலத்தை நீதிவானுக்கு வழங்கியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *