பிரதான செய்திகள்

அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தற்போது நிலவும் சீரற்ற வானிலைால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்படக்கூடிய அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்காக தகவல்களை கோருவதாக அறிக்கையொன்றினூடாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மக்கள் தகவல்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களும் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

0112434251 என்ற இலக்கத்தினூடாக இலங்கை இராணுவத்தினருக்கு தகவல் வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

0112445368 என்ற இலக்கத்தினூடாக இலங்கை கடற்படையினருக்கும் 0112343970 என்ற இலக்கத்தினூடாக விமானப் படையினருக்கும் அனர்த்தங்கள் தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம்! முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தானது

wpengine

கிழக்கு மகாண கல்விப் பணிப்பாளரிடம் தோற்றுப்போன ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தினர் மலேசிய பேராசியர்கள் சந்திப்பு.

wpengine