பிரதான செய்திகள்

அந்த நபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் நான் கோரவில்லை அமைச்சர் றிஷாட்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் இராணுவ தளபதியிடம் தகவல் கேட்டதை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனினும் தான் அந்த நபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அன்றையதினம் இராணுவ தளபதியை முதன்முறையாக தொடர்பு கொண்ட போது, நீர்கொழும்பில் இறுதி அஞ்சலி மேற்கொள்வதனால் அந்த பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இராணுவ தளபதியிடம் கேட்டேன். அவ்வளவு தான் பேசினேன் யாரையும் விடுவிக்குமாறு கோரவில்லை.

இரண்டாவது தடவை இராணுவ தளபதியிடம் பேசிய போது, இப்படி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என கேட்டேன். எனினும் விடுவிக்குமாறு பொலிஸாரிடமோ, இராணுவ தளபதியிடமோ கோரவில்லை.

எனது மகன் எங்கு உள்ளார் என அறிந்து கொள்ள வேண்டும் என என்னிடம் தந்தை ஒருவர் கேட்டார். கைது செய்யப்பட்டவர் குறித்து பொலிஸாரிடம் குறித்த நபர் கேட்ட போது பொலிஸார் தெரியாதென கூறியுள்ளனர்.

மகனுக்கு என்ன நடந்ததென தந்தை கேட்டார். அதனாலேயே அவ்வாறு ஒருவர் கைது செய்யப்பட்டாரா என்பதனை அறிந்து கொள்வதற்காக நான் இராணுவ தளபதியை தொடர்பு கொண்டேன். கைது செய்யப்பட்டவர் எங்குள்ளார் என என்னிடம் மாத்திரம் அல்ல மேலும் சில அமைச்சர்களிடம் கேட்டனர்.

நான் இராணுவ தளபதியுடன் உரையாடிய விடயங்கள் எனது கையடக்க தொலைபேசியில் பதிவாகியுள்ளது. அவசியம் என்றால் நான் அதனை வழங்குகின்றேன்.

நான் யாரையும் விடுவிக்குமாறு கோரினால் அதனை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபரை கைது செய்ய பின்னர், மூன்று தடவைகள் ரிசாத் பதியுதீன் தொடர்பு கொண்டதாக இராணுவ தளபதி நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்காளர் படிவங்களை துரிதமாக நிரப்பி கையளிக்கவும்

wpengine

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine

துாதுவர் இப்ராகிம் சகீப் அன்சரியினை வெளியேற்ற வேண்டும்-வைகோ கோரிக்கை

wpengine