அரசியல்பிரதான செய்திகள்வவுனியா

அநுர அலை குறையவில்லை! வடக்கு – கிழக்கு மாவட்டங்களில் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.

“அநுர அலை இன்னும் குறையவில்லை. அதனை குறைத்து மதிப்பிட முடியாது. அத் துடன் எதிர்வரும் உள்;ராட்சி மன்றத் தேர் தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடு வதில்லை” என்று தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச் செய லாளருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை முதல் மதியம் வரை வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

அதன் பின் வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு ஊடக சந்திப்பு நடைபெற்றது.
அதில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது உள்;ராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக மட்டுமே ஆராயப்பட்டது.

கட்சியின் மத்திய செயற்குழு உள்; ராட்சி மன்ற தேர்தல்களில் போட்டி யிடுவது தொடர்பான தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது.
அதன்படி வடக்கு – கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்;ராட்சி மன்றங்க ளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.

இந்த தேர்தல் முக்கியமானதொரு தேர்தல். நாங்கள் ஒவ்வொரு தேர் தல்களையும் முக்கியமானதொரு தேர்தல் என்றே கூறி வந்துள்ளோம். உண்மை அது தான். ஒவ்வொரு தேர் தல்களில் அவ்வக் காலப்பகுதிகளில் வேறு வேறு நோக்கங்களுக்காக முக்கியமான தேர்தலாக இருக்கும்.

இம்முறை நாடு அனுர அலையில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளதுதவிர ஏனைய மாவட்டங்களில் அநுர அலையில் எமது மக்களின் வாக்குகள் சென்றுள்ளது.

திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்த லைக் காட்டிலும் நாடாளுன்ற தேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு – கிழக்கில் பெரும்பான்மை பெற்றார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நிலை மாறியது.

தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம். நாம் கவனமாக கையாண்டு நாடு அநுரவோடு இருக் கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும்.

கொழும்பு மாநகர சபையில் தமிழ் மக் கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளது. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தி யுள்ளது. அங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும், அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும் பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” – என்றார்.

Related posts

மன்னாரில் வீட்டுத்தோட்ட புரட்சி ஆரம்பித்து வைத்த ஸ்ரான்லி டிமெல் -சமுர்த்தி பணிப்பாளர்

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் சிறுவர் தின போட்டிகள் (படம்)

wpengine

சிரியா பெண்களிடம் பாலியல் சேட்டை செய்யும் ஐ.நா. அதிகாரிகள்

wpengine