பிரதான செய்திகள்

அநுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்! உறுப்பினர்கள் கோரிக்கை

அநுராதபுர மாவட்டத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குமிடையிலான பூர்வாங்கக் கலந்துரையாடல் இன்று (06) “தாருஸ்ஸலாம் ” தலைமையகத்தில் இடம்பெற்றபோது, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கும் கலந்து கொண்டார்.

இதன்போது, அநுராதபுர மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதையே தலைவரிடம் பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.

போட்டியிடும் உள்ளுராட்சி மன்றங்கள் அவற்றில் கட்சிக்கு வழங்கப்படும் வட்டார மற்றும் ஆசன ஒதுக்கீடுகள் என்பவற்றைப் பொறுத்தான ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவத்துடனான பேச்சுவார்த்தையின் பின்னர், இதுபற்றிய இறுதித் தீர்மானம் மிக விரைவில் மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் குரலை நசுக்குவதற்காகவும் அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்வும் இனாவாதிகள் சதி

wpengine

தடுப்பூசி ஏற்றுவதுடன், செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும்

wpengine

துமிந்தவுக்கு மரண தண்டனை! மஹிந்தவுக்கு மகிழ்ச்சி;கோட்டாவுக்கு அதிர்ச்சி.

wpengine