பிரதான செய்திகள்

அத்தியாவசிய பொருள்களின் பாரிய தட்டுபாடொன்று நாட்டில் ஏற்படும்.

அத்தியாவசிய பொருள்களின் பாரிய தட்டுபாடொன்று நாட்டில்
ஏற்படப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எம்.பியுமான அநுரகுமார
திஸாநாயக்க எச்சரித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்று முன் தினம் (03) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து
உரையாற்றிய அவர், கடந்த இரு வருடங்களாக வேகமாக நாட்டின்
அந்நியசெலாவணி வீழ்ச்சியடைந்து வருகிறது. இது நாட்டு மக்களின் வாழ்வில்
பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.

நாட்டில் கையிருப்பில் உள்ள அந்நியசெலாவணி தொடர்பான தகவல்களை நிதி
அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும். இதனால் நாட்டில் அத்தியாவசிய
பொருள்களுக்கு தட்டுப்பாடு பாரியளவில் ஏற்பட உள்ளது எனவும் அநுர குமார
எச்சரித்தார்.

Related posts

க.பொ.த.சாதாரண தரம் தேவையில்லை! உயர் தரம் கற்க

wpengine

புலத்கொகுபிடிய ஒருங்கிணைந்த கிராமிய குடிநீர் வழங்கல் திட்டம்

wpengine

கிராம சேவகர் அரசியல் பழிவாங்கல்! மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine