சகல நாடுகளிவும் பொருட்களின் விலைகள் மற்றும் வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வரும் சந்தர்ப்பத்தில் இலங்கையில் அத்தியவசிய பொருட்களை மானிய விலைகளில் வழங்குவதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவல் இதனை கூறியுள்ளார்.
மானிய விலையில் குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதன் காரணமாக மக்கள் அவற்றை சிக்கனமாக பயன்படுத்துவதில்லை. எரிபொருள் விலையை மக்கள் உணர இடமளித்தால்,அவர்கள் தேவையற்ற பயணங்கள் செல்வதை நிறுத்தி விடுவார்கள்.
சகல நாடுகளில், எரிபொருள், எரிவாயு, அத்தியவசிய பொருட்களின் விலைகளும், வாழ்க்கை செலவும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நுகர்வு பொருட்களுக்கு மானியம் வழங்குவதை நான் ஏற்க மாட்டேன்.
தண்ணீர் மானிய விலையில் வழங்கப்படுவதால், குழாயை திறந்து விட்டு, மீசை வெட்டுகின்றனர். 5 நிமிடத்தில் குளித்து முடிக்கலாம் என்ற போதிலும் 20 நிமிடங்கள் வரை தண்ணீரில் தலை குளிக்கின்றனர்.
தண்ணீருக்கு செலவாகும் பணத்தை மக்களிடம் அறவிட்டால், மக்கள் வீரயமாக்குவதை நிறுத்துவார்கள். மின்சாரத்தையும் நாம் மானிய விலையில் வழங்குகிறோம். அதற்கான கட்டணத்தை முழுமையாக மக்களிடம் அறவிட்டால், மின்சாரத்தை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துவார்கள்.
அத்துடன் உலகில் ஏனைய நாடுகள் தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை குறைத்தன. எனினும் அந்நாடுகளில் மகக்ள் வீதியில் இறங்கி எதிர்ப்பை காட்டவில்லை. இது உலகில் சம்பளத்தை அதிகரிக்கும் நேரமல்ல. குறைக்கும் நேரம்.
இதனால், நாட்டிற்குள் இந்த சந்தர்ப்பத்தல் கோரிக்கைகள், கோஷங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.