வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட்டின் மீது வை.எல்.எஸ்.ஹமீட்டினால் தொடர் தேர்ச்சியாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் பதில்கள் கிடைத்திருக்கின்றன.
வை.எல்.எஸ் ஹமீட்டின் குற்றச்சாட்டுகளையும், அதிர்வில் கிடைத்த பதில்களையும் நோக்குவோம்.
1.குற்றச்சாட்டு ஒன்று: 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் தான் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளில் சுமார் 15000 ஹெக்டயர் காணிகள் வில்பத்து சரணாலயத்தோடு இணைத்துக் கொள்ளப்பட்டது. இவ்வர்த்தமானி அறிவித்தலை மையப்படுத்தித்தான் சூழலியலாளர்கள் முஸ்லிம்கள் காட்டினை அழிக்கின்றார்கள் என குற்றம் சுமத்தினார்கள். குறித்த 2012 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலானது ரகசியமாக வெளியிடப்பட்டதாகவும், அது தனக்குத் தெரியாது என்றும் ரிஷாட் கூறுகிறாரே. இது எப்படி அமைச்சர் ரிஷாட்டிற்குத் தெரியாமல் போகும். மஹிந்த குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரகசியமாக வெளியிட்டதாக ரிஷாட் பொய் கூறி ஏமாற்றுகிறார் என்பது வை.எல. எஸ் ஹமீட்டின் முதலாவது குற்றச்சாட்டு.
அதிர்வில் கிடைத்த பதில்.:
தொகுப்பாளர் முஸர்ரப்: 2012 ஆம் அண்டு வர்த்தமானி ரசகியமாக வெளியிடப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் கூறுவதை நீங்கள் மறுக்கின்றீர்கள். அப்படியானால் 2012 இல் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக இருந்த திரு வை.எல்.எஸ் ஹமீட் ஆகிய உங்களுக்கு 2012 அம் ஆண்டு வர்த்தமானி வெளியடப்பட்டது தெரியுமா?
வை.எல்.எஸ் ஹமீட்: தெரியாது
முஸர்ரப்: திரு ஹூனைஸ் பாருக் அவர்களே குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது தொடர்பில் நீங்கள் அன்றைய காலகட்டத்தில் அறிந்தீர்களா?
ஹுனைஸ் பாருக்: இல்லை தெரியாது.
முஸர்ரப்: ஆக செயலாளரான உங்களுக்கும், தெரியாது ஏனையோருக்கும் தெரியாது என்றால் 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி ரகசியமான முறையில் வெளியிடப்பட்டது . அது குறித்து எனக்குத் தெரியாது என அமைச்சர் ரிஷாட் கூறியதில் என்ன பிழை இருக்க முடியும். அவர் கூறியது சரிதானே. அவர் மீது நீங்கள் பழி சுமத்துவது அபாண்டம் தானே!
வை.எல்.எஸ் ஹமீட்: நான் செயலாளர் செயலாளருக்குரிய வேலையைத்தான் செய்தேன். வர்த்தமானி விடயம் தொடர்பாக எனக்குத் தெரியாது.
முஸர்ரப் : செயலாளர் வர்த்தமானி விடயம் தொடர்பில் அக்கறை கொள்வதில்லையா? சமூக விடயங்களில் தலையிட மாட்டீர்களா?
வை.எல்.எஸ் ஹமீட்: நான் கொழும்பில் இருந்து பணியாற்றுகிறேன். எனக்குத் தெரியாது. அவருடைய ஊர் விவகாரம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?
குறித்த ஐவ. எல் எஸ் ஹமீட் இன் பதில்களிலிருந்தே அமைச்சர் ரிஷாட் இன் மீதான குற்றச்சாட்டு அபாண்டம் எனபது நிரூபணமாகிறது.
குற்றச்சாட்டு 2 : வில்பத்துக் காட்டை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள், அமைச்சர் ரிஷாட் காட்டையழிக்கிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பின்னர் சூழலியலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால என அனைவரும் இவ்விடயத்தை ஆராய்ந்து வில்பத்து காடு அழிக்கப்படவில்லை., ரிஷாட் எவ்வித காணியையும் பிடிக்கவில்லை என கூறினர் 2012 வர்த்தமானி அறிவித்தல்தான் பிழையானது அதனை நீக்கவேண்டும் என கூறினர். ஆக வில்பத்து தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது. ஆனால் அமைச்சர் ரிஷாட் தான் தொடர்ந்தும் வில்பத்து காடு அழிக்கப்படவில்லை. ஒரு அங்குலம் நிலத்தையேனும் முஸ்லிம்கள் பிடிக்கவில்லை என மீண்டும் மீண்டும் வலிந்து கூறுவதும், தேர்தல் வரும் போது பத்திரிகையாளர் சந்திப்பு நடாத்துவதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடாத்துவதும் என அரசியல் லாபத்துக்காக இதனைப் பயன்படுத்துகிறாரே ஒழிய உண்மையில் வில்பத்துக்கான எதிர்ப்பு இப்போதைக்கு இல்லை. என்பது வை.எல்.எஸ் ஹமீட் அவர்களின் இன் குற்றச்சாட்டு..
அதிர்வில் கேட்கப்பட்ட கெள்விகளும் பதில்களும்.
முஸர்ரப் : திரு வை.எல்.எஸ் ஹமீட் அவர்களே! வில்பத்து தொடர்பான எதிர்ப்பு முடிந்துவிட்டது என்றும், சூழலியலாளர்கள், ஜனாதிபதி உட்பட அனைவரும் காடழிப்பு நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டதாகவும் அமைச்சர் ரிஸாட் அரசியல் லாபத்துக்காகவே இதனைப் பேசிவருவதாக கூறுகிறீர்களே, நீங்கள் கூறுவது போல வில்பத்துக்கான எதிர்ப்பு இல்லாமலாக்கப்பட்டிருந்தால் 2017 இல் ஜனாதிபதியால் ஒப்பமிடப்பட்ட வர்த்தமானி முஸ்லிம்களுக்க பாதகமாக வெளியடப்பட்டிருக்கிறதே. ஆக இன்னும் வில்பத்து தொடர்பில் சூழலியலாளர்கள் பிரச்சினைக்குரியவர்களாகவும், ஜனாதிபதியை பிழையாக வழிநடாத்தக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது அல்லவா மேலும். ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்த சிவில் சமூகமும் இந்த விடயத்தில் ஜனாதிபதி பிழையாக வழிநடாத்தப்பட்டிருக்கிறார் என்றே கூறியிருக்கிறார்கள். ஆக உங்கள் குற்றச்சாட்டு அபாண்டம்தான் தானே!
வை.எல்.எஸ் ஹமீட் : (மௌனமும், மழுப்பலும்)
தொடரும்..